அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு

Posted On: 13 DEC 2024 11:49AM by PIB Chennai

ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் அமைப்பு  2024 டிசம்பர் 12-ம் தேதி  சர்வதேச அளவிலான ஆராய்ச்சி வலைதள அமைப்பில் புதிய உறுப்பினர்களாக பதினொரு துறை சார்ந்த வல்லுநர்களை தேர்ந்தெடுப்பதாக அறிவித்துள்ளது. இந்த 11 பேரில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் ஃபரிதாபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மண்டல மையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உயிரி தொழில்நுட்ப மண்டல மையத்தில் இணை பேராசிரியர்களாக பணி பரிந்து வரும் டாக்டர் பிரேம் கௌஷல், டாக்டர் ராஜேந்தர் மோத்தியானி ஆகியோர் சர்வதேச உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி வலைதள அமைப்பின் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொற்றுநோய் நுண்ணுயிரிகள், மைக்கோபாக்டீரியம் காசநோய், எண்டமீபா ஹிஸ்டோலிடிகா போன்ற கிருமிகள் குறித்த ஆராய்ச்சிப் பணிகளில் டாக்டர் பிரேம் கௌஷல் கவனம் செலுத்தி வருகிறார். தோல் நிறமியில் கால்சியம் உந்துசக்தி உட்புற உடல்கூறுகளின் செயல்பாடுகள் போன்றவற்றை புரிந்து கொள்வதில் டாக்டர் ராஜேந்தர் மோத்தியானி ஆராய்ச்சிகள் கவனம் செலுத்துகிறது.

இந்த சர்வதேச அமைப்பு சிலி, இந்தியா, சிங்கப்பூர், தைவான் போன்ற நாடுகளில் உள்ள இளம் விஞ்ஞானிகளின் குழுவின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2084044

***

VL/SV/KPG/RR/DL


(Release ID: 2084235) Visitor Counter : 30


Read this release in: English , Urdu , Hindi