தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

5ஜி தொழில்நுட்பத்தை நாடு தழுவிய அளவில் வெளியிடுவதற்கான விரிவான திட்டம்

Posted On: 12 DEC 2024 4:32PM by PIB Chennai

நாடு தழுவிய அளவில் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப் படுத்துவதற்காக,  5ஜி சேவைகளுக்கான அலைக்கற்றையை ஆகஸ்ட் 2022-ல் ஏலத்தின் மூலம் அரசு ஒதுக்கியுள்ளது. அதன்பிறகு, 5ஜி சேவைகள் 01அக்டோபர்2022 அன்று தொடங்கப்பட்டன. 31 அக்டோபர் 2024 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் 5ஜி சேவைகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் 783 மாவட்டங்களில் 779 மாவட்டங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. மேலும், நாட்டில் 4.6 லட்சத்துக்கும் மேற்பட்ட 5ஜி அடிப்படை டிரான்ஸ்ஸீவர் நிலையங்கள் (பி.டி.எஸ்) நிறுவப்பட்டுள்ளன.

5ஜி சேவைகளை பரவலாக்க அரசு பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது, அவற்றில் பின்வருவன அடங்கும்:

ஏலம் மூலம் செல்பேசி சேவைகளுக்கு போதுமான அலைக்கற்றை ஒதுக்கீடு.

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் மற்றும் வங்கி உத்தரவாதங்கள் ஆகியவற்றை சீரமைத்ததன் விளைவாக தொடர்ச்சியான நிதி சீர்திருத்தங்கள்.

அலைக்கற்றை பகிர்வு, வர்த்தகம் மற்றும் திரும்ப ஒப்படைத்தல் ஆகியவை அலைக்கற்றையை திறம்படப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரேடியோ அதிர்வெண் ஒதுக்கீடுகள் மீதான நிலையான ஆலோசனைக் குழு அனுமதிக்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல்.

சிறிய செல்கள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளை நிறுவுவதற்கு தெரு தளவாடங்களைப் பயன்படுத்துவதற்கு காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்க ஆர்.ஓ.டபிள்யூ விதிகளில் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசால் எடுக்கப்பட்ட மேற்கூறிய நடவடிக்கைகளுடன், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் (டி.எஸ்.பி) நாடு முழுவதும் 5 ஜி சேவைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.

***

TS/PKV/RR/DL


(Release ID: 2083915) Visitor Counter : 14


Read this release in: Urdu , Hindi , English