தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சஞ்சார் சாத்தி இணையதளத்தை தொலைத் தொடர்புத் துறை தொடங்கியுள்ளது
प्रविष्टि तिथि:
12 DEC 2024 4:30PM by PIB Chennai
மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் இந்த இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
மோசடியான தகவல் தொடர்புகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், மொபைல் இணைப்புகள், கைபேசிகள், குறுந்தகவல்களை அனுப்புவர்கள் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் மீது தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வகை செய்கிறது.
இந்திய கைபேசி எண்களைப் போன்ற தோற்றமளிக்கும் போலியான சர்வதேச அழைப்புகளை அடையாளம் கண்டு தடுக்கும் வகையில், சர்வதேச அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலியான டிஜிட்டல் கைதுகள், பிற தொலைத் தொடர்பு மோசடிகள், ஆள்மாறாட்டம் போன்ற அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை கையாள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083727
----
TS/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2083874)
आगंतुक पटल : 74