எரிசக்தி அமைச்சகம்
எரிசக்தி சேமிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்
Posted On:
12 DEC 2024 4:43PM by PIB Chennai
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது எரிசக்தி சேமிப்பில் நாட்டின் செயல்திறன் மிகச் சிறந்த ஒன்றாகும். சர்வதேச எரிசக்தி முகமையின் மதிப்பீடுகளின்படி, 2010-19 காலகட்டத்தில் உலகளாவிய தீவிர எரிசக்தி முன்னேற்றம் 2% ஆகவும், இந்தியாவுக்கு இது 2.5% ஆகவும் இருந்தது. 2021-24 காலகட்டத்தில், உலகளாவிய தீவிர எரிசக்தி முன்னேற்றம் 1.3% மேம்பட்டது, அதேசமயம், இந்தியாவின் எரிசக்தி முன்னேற்றம் 1.6% மேம்பட்டது. 2024-ம் ஆண்டில் கூட உலகளாவிய எரிசக்தி முன்னேற்றம் 2024-ம் ஆண்டில் சுமார் 1% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இந்தியாவின் எரிசக்தி முன்னேற்றம் 2.5% மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சாலைகளுக்கான செயல்பாடு, சாதனை மற்றும் வர்த்தகம், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தர நிர்ணயம் மற்றும் பெயரிடும் திட்டம், அனைவருக்கும் குறைந்த விலையில் எல்இடி விளக்குகள் வழங்கும் உன்னத ஜோதித் திட்டம், எரிசக்தி சேமிப்பு கட்டிட விதித் தொகுப்பு மற்றும் மின் போக்குவரத்தை ஏற்றுக்கொள்வது ஆகியவை அரசால் செயல்படுத்தப்படும் முக்கிய எரிசக்தி சேமிப்புத் திட்டங்களாகும்.
மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டரீதியான அமைப்பான எரிசக்தி திறன் பணியகத்தின் அறிக்கையின்படி, பல்வேறு எரிசக்தி திறன் திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் 53.60 மில்லியன் டன் எண்ணெய்க்கு சமமான ஒட்டுமொத்த எரிசக்தி சேமிப்புக்கு வழிவகுத்தது, இது 2023-24-ம் ஆண்டில் நாட்டின் மொத்த முதன்மை எரிசக்தி விநியோகத்தில் 5.89% ஆகும்.
இந்தத் தகவலை மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
TS/PKV/AG/DL
(Release ID: 2083863)
Visitor Counter : 18