இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
புதுதில்லி தேசிய ஊக்கமருந்து தடுப்பு சோதனை ஆய்வகமானது அத்லெட்டுகளுக்கான உயிரியல் பாஸ்போர்ட் நிர்வாக பிரிவாகச் செயல்படும்
Posted On:
12 DEC 2024 4:17PM by PIB Chennai
புது தில்லியில் உள்ள தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆய்வகத்திற்கு தடகள வீரருக்கான உயிரியல் பாஸ்போர்ட் நிர்வாக பிரிவாக செயல்பட அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான ஒப்புதலை உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை 2024 டிசம்பர் 6 அன்று அளித்துள்ளது.
தடகள வீரருக்கான உயிரியல் பாஸ்போர்ட் என்பது அதி நவீன ஊக்கமருந்து பயன்பாட்டைக் கண்டறியும் கருவியாகும். இது ஒரு விளையாட்டு வீரரின் உயிரியல் மாறுபாடுகளைக் கண்காணிக்கிறது. இரத்தம் மற்றும் ஸ்டீராய்டு குறித்த அளவுகளில் ஏற்படும் மாறுபாடுகளை பகுப்பாய்வு செய்கிறது. இத்தகைய கண்காணிப்பின் மூலம் நியாயமான விளையாட்டுப் போட்டிகள் உறுதி செய்யப்படுகின்றன.ஊக்கமருந்து பயன்பாடு இல்லாமலும் கறைபடியாத கரங்களும் கொண்ட விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கவும் இக்கருவி உதவுகிறது.
ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் இது இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது. உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையால் அங்கீகாரம் பெற்ற 17 தடகள வீரர்களுக்கான பாஸ்போர்ட் நிர்வாக பிரிவுகளில் ஒன்றாக இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவின் தடகள வீரர்களுக்கான உயிரியல் பாஸ்போர்ட் மேலாண்மைப் பிரிவு சொந்த நாட்டில் மற்றும் அண்டை நாடுகளில் செயல்படும் ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புகளுக்கும் சேவை புரியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083720
***
TS/IR/RJ/DL
(Release ID: 2083856)
Visitor Counter : 30