தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
போலி கைபேசி இணைப்புகள்
இடுகை இடப்பட்ட நாள்:
11 DEC 2024 4:05PM by PIB Chennai
போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட மொபைல் இணைப்புகளை அடையாளம் காண தொலைத் தொடர்புத் துறை செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியை உருவாக்கியுள்ளது. பகுப்பாய்வின் அடிப்படையில், 78.33 லட்சம் மொபைல் இணைப்புகள் சரிபார்ப்புக்குப் பிறகு தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 6.78 லட்சம் கைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சந்தாதாரர்களுக்கு கைபேசி இணைப்புகளை வழங்குவதற்கான தற்போது நடைமுறையில் உள்ள ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, தொலைத் தொடர்பு உரிமைதாரர்கள் தங்களது விற்பனை முனையங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோர் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
----
TS/SV/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2083507)
வருகையாளர் எண்ணிக்கை : 56