தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
முக்கிய இடங்களில் பொது வைஃபை கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் இணையதள பயன்பாட்டை அதிகரிக்கச் செய்தல்
Posted On:
11 DEC 2024 4:06PM by PIB Chennai
பிரதமரின் வைஃபை பயன்பாட்டு வலையமைப்பு வசதியை உருவாக்குவதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவை கட்ட்மைப்பது, அதன் பலன்கள் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் நோக்கில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பொது வைஃபை இணையதள வசதியை அமைப்பதன் மூலம் இணையதள பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரதமரின் வைஃபை இணையதள கட்டமைப்பின் கீழ், பொது தரவு அலுவலகங்கள் அவற்றின் தொழில்நுட்ப-வணிகக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் முக்கிய இடங்களில் வைஃபை இணையதள சேவையை சந்தாதாரர்களுக்கு வழங்குகின்றன.
வைஃபை இணையதள பயன்பாட்டை அதிகரிக்க கருத்தரங்குகள், பத்திரிகை சுருக்கங்கள், விளம்பரங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் இத்திட்டத்தை ஊக்குவிக்கிறது. இத்த்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம வரை 516 பயிலரங்குகள், 298 கருத்தரங்குகள், 172 பத்திரிகை சுருக்கங்கள் போன்ற விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
----
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2083505)
Visitor Counter : 10