தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு லட்சம் 4ஜி அலைக்கற்றைத் தளங்களை பிஎஸ்என்எல் நிறுவுகிறது

Posted On: 11 DEC 2024 4:07PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு லட்சம் 4ஜி அலைக்கற்றைத் தளங்களை பி.எஸ்.என்.எல் நிறுவுகிறது. இந்த தளத்தில் உருவாக்கப்படும் உபகரணங்கள் 5G சேவையிலும் மேம்படுத்தக்கூடியவை.

4ஜி தொலைத் தொடர்பு சேவைத் திட்டத்தின் கீழ், லட்சத்தீவு தீவுகளில் தொலைத்தொடர்பு சேவைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற கிராமப்புற, பின்தங்கிய பகுதிகள் உட்பட நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு வசதி இல்லாத பகுதிகளில் அந்த சேவையை வழங்குவதற்கான மத்திய அரசின்  லட்சிய திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்தினடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புறங்களில் அதிவேக கண்ணாடி இழை நார் அகண்ட அலைவரிசை இணையதள சேவையை மேம்படுத்த திருத்தியமைக்கப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு 04.08.2023 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் அனைத்து மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்ட 1.5 கோடி கண்ணாடி இழை நார் இணைப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.

---

TS/SV/KPG/KR/DL


(Release ID: 2083502) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi