தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கிராம பஞ்சாயத்துகளில் இணையம் மற்றும் வைஃபை வசதி
प्रविष्टि तिथि:
11 DEC 2024 4:04PM by PIB Chennai
நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகன்ற அலைவரிசை இணைப்பை வழங்க பாரத்நெட் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தற்போதுள்ள பாரத்நெட் பகுதி-1 மற்றும் பகுதி-2 கட்டமைப்பை மேம்படுத்தவும், மீதமுள்ள கிராம பஞ்சாயத்துகளில் கட்டமைப்பை உருவாக்கவும் திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் கிராம பஞ்சாயத்து அல்லாத மீதமுள்ள கிராமங்களுக்கு (தோராயமாக 3.8 லட்சம்) தேவையின் அடிப்படையில் கண்ணாடி இழை இணைப்பை வழங்குகிறது. பல கிராம பஞ்சாயத்துக்களில் நிறுவப்பட்ட உபகரணங்களால் வைஃபை சேவை வசதி கிடைக்கிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083225
***
TS/IR/RJ/DL
(रिलीज़ आईडी: 2083488)
आगंतुक पटल : 42