மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பீகாரில் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டம்
Posted On:
11 DEC 2024 2:30PM by PIB Chennai
பீகாரில் 20214-15-ம் ஆண்டில் 4.79 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2023-24-ம் ஆண்டில் 8.73 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது பத்தாண்டுகளில் 81.98% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2014-15-ம் ஆண்டில் உள்நாட்டு மீன் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் 9-வது இடத்தில் இருந்த பீகார், தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. மேலும், 2023-24-ம் ஆண்டில், 38.38 ஆயிரம் மெட்ரிக் டன் மீன்களை அண்டை மாநிலங்களுக்கும் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் பீகார் மாநிலத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.
பீகாரில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.102.49 கோடியும், பிரதமரின் சிறப்புச் தொகுப்புத் திட்டத்துக்கு ரூ.56.35 கோடியும் என மொத்தம் ரூ.279.55 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீன் குஞ்சு வளர்ப்பு, புதிய குளங்கள் கட்டுதல், மாகூர் குஞ்சு பொரிப்பகம், இறால் குஞ்சு பொரிப்பகம், மீனவர்களுக்கு உறைவிடம், கூண்டு வளர்ப்பு, பேனா வளர்ப்பு, மொத்த விற்பனை மீன் அங்காடி, சில்லறை மீன் அங்காடி, நடமாடும் சில்லறை மீன் விற்பனை நிலையங்கள், மீன் ஊர்தி போன்றவை பிரதமரின் தொகுப்புத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கிய மீன்வள நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்தத் தகவலை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் 2024 டிசம்பர் 10 அன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
---
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2083464)