கூட்டுறவு அமைச்சகம்
தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் மற்றும் பொதுச்சேவை மையங்கள் மூலம் மின்-ஆளுகை சேவைகளை விரிவுபடுத்துதல்
Posted On:
11 DEC 2024 5:20PM by PIB Chennai
தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) கிராமப்புற குடிமக்களுக்கு மின்-ஆளுமை சேவைகளை வழங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. கூட்டுறவு அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நபார்டு) மற்றும் சிஎஸ்சி மின் ஆளுகை சேவைகள் இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் பிஏசிஎஸ் வங்கி, காப்பீடு, வேளாண் சேவைகள், சுகாதார சேவைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட மின்னணு சேவைகளை வழங்க முடியும். நவம்பர் 21-ம் தேதி நிலவரப்படி, 40,214 பிஏசிஎஸ் கிராமப்புற குடிமக்களுக்கு சிஎஸ்சி சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளன.
இதன் மூலம், கிராமப்புற மக்கள் நிதி உள்ளடக்கம், கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு அரசு மற்றும் மக்களிடையிலான சேவைகள் தொடர்பான அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலைப் பெற முடியும். தேசிய கூட்டுறவு கவுன்சில், சி.எஸ்.சி மின் ஆளுகை சேவை இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் பி.ஏ.சி.எஸ்-க்கான பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிலரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது பிஏசிஎஸ் மத்தியில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தவும் வழிவகுக்கும். கூடுதலாக, இந்த முயற்சி பஞ்சாயத்து / கிராம மட்டத்தில் பல்வேறு மக்களை மையமாகக் கொண்ட சேவைகளுக்கான பொறுப்பு மையங்களாக செயல்பட பிஏசிஎஸ்-க்கு உதவும்.
இவை தவிர, மத்திய அரசு ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கீட்டில், செயல்பாட்டு பிஏசிஎஸ்களை கணினிமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதுவரை, 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்து 67,930 பிஏசிஎஸ்-களை கணினிமயமாக்குவதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதற்காக ரூ.699.89 கோடி மத்திய அரசின் பங்காக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.
***
AD/ PKV/ RJ/ DL
(Release ID: 2083443)