சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: பிரதமரின் மாதிரி கிராமத் திட்டம் : 29,851 கிராமங்கள் தேர்வு

Posted On: 11 DEC 2024 1:03PM by PIB Chennai

2021-22-ம் ஆண்டில், பிரதமரின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ், 40 சதவீதத்திற்கும் மேல் எண்ணிக்கையில் ஆதிதிராவிடரை உள்ளடக்கிய 500 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட தகுதியுள்ளவை ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில், குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு, கிராமபுறச் சாலைகள் மற்றும் வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் தூய்மையான எரிபொருள், வேளாண் நடைமுறைகள், நிதி உள்ளடக்கம், டிஜிட்டல்மயமாக்கல், வாழ்வாதாரம், திறன் மேம்பாடு ஆகிய 10 களங்களின் கீழ் அடையாளம் காணப்பட்ட 50 சமூக-பொருளாதார மேம்பாட்டுக் குறியீடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

2018-19-ம் ஆண்டு முதல், 29851 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, 41,29,228 பயனாளிகள் பயன்பெறும் வகையில், 36,896 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2083110

***

TS/IR/RJ/KR


(Release ID: 2083145) Visitor Counter : 35


Read this release in: English , Urdu , Hindi , Manipuri