விவசாயத்துறை அமைச்சகம்
மின்னணு வேளாண் இயக்கம்
Posted On:
10 DEC 2024 5:02PM by PIB Chennai
2817 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் மின்னணு வேளாண் இயக்கம் தொடங்குவதற்கு 2024 செப்டம்பர் 2 அன்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. புதுமை கண்டுபிடிப்புகளுடன் கூடிய வேளாண் முறைகளை மையமாகக் கொண்ட மின்னணு முறையிலான தீர்வுகளை வழங்குவதற்கும், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில், பயிர் குறித்த நம்பகமான தகவல்கள் கிடைக்கச் செய்வதற்கும், நாட்டில் ஒரு வலுவான மின்னணு வேளாண் சூழல் அமைப்பை செயல்படுத்தவும் இந்த இயக்கம் வகை செய்கிறது. மண் வளம், சுயவிவரக் குறிப்பு, மத்திய- மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் பிற தகவல் தொழில்நுட்ப வசதிகள் போன்ற வேளாண் சார்ந்த நடவடிக்கைகளின் மின்னணு பொது உள்கட்டமைப்பை உருவாக்க இந்த இயக்கம் உதவுகிறது. வேளாண் திட்டம் இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். விவசாயிகளின் பதிவேடு, புவிசார் குறியீடுகளுடன் கூடிய கிராம வரைபடங்கள், பயிர் விதைப்பு பதிவேடு ஆகிய அனைத்தும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இத்திட்டத்தினை செயல்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும், நிர்வாக, தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
05.12.2024 நிலவரப்படி, மொத்தம் 29,99,306 விவசாயிகளுக்கு வேளாண் “அடையாள அட்டைகள் உருவாக்கப்பட்டு, காரீப் பருவத்தில் 436 மாவட்டங்களில் மின்னணு பயிர் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
---
TS/SV/KPG/DL
(Release ID: 2082951)
Visitor Counter : 28