ஆயுஷ்
தேசிய ஆயுஷ் இயக்கம் – ஒற்றைச்சாளர முறையில் பல்வேறு மருத்துவ முறைகளுக்கான வசதிகளை ஒருங்கிணைத்தல்
Posted On:
10 DEC 2024 4:27PM by PIB Chennai
தேசிய ஆயுஷ் இயக்கத்தின் மத்திய நிதியுதவித் திட்டம் 2014-ல் கீழ்க்கண்ட நோக்கங்களுடன் தொடங்கப்பட்டது.
1. ஆயுஷ் சுகாதார சேவைகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதன் மூலம் நாடு முழுவதும் ஆயுஷ் சுகாதார சேவைகளை வழங்குதல்.
2. ஆயுஷ் சுகாதார மையங்கள் மூலம் ஆயுஷ் கோட்பாடுகள், நடைமுறைகளின் அடிப்படையில் தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டு சேவையில் கவனம் செலுத்தி, நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான செலவுகளை குறைக்கும் வகையில் முழுமையான சுகாதார மாதிரியை உருவாக்குதல்.
3. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார நிலையங்களில் ஆயுஷ் மருத்துவ வசதிகளை ஒரே இடத்தில் அமைத்து அதன் மூலம் மருத்துவ பன்முகத்தன்மை தேவைப்படும் பொதுமக்களுக்கு விருப்பமான தேர்வை வழங்குதல்.
4. தேசிய சுகாதாரத் திட்டம் 2017-ன் படி பொது சுகாதாரத்தில் ஆயுஷின் பங்கை வலியுறுத்துதல்.
5. ஆயுஷ் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் ஆயுஷ் மருத்துவ வசதிகளை ஒற்றைச் சாளர முறையில் நோயாளிகள் தேர்வு செய்யும் உத்தியை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
TS/SV/KPG/DL
(Release ID: 2082927)