விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதி
Posted On:
10 DEC 2024 5:02PM by PIB Chennai
பிரதமரின் வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் கிரிஷன்னதி ஆகிய திட்டங்களின் கீழ் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர செயல் திட்டங்களின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு மானியமாக நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டங்களில் உள்கட்டமைப்பு அம்சங்கள், பயனாளிகள் சார்ந்த நலத்திட்டங்கள் ஆகியவை அடங்கும்.
இத்திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாநிலங்கள் யூனியன் பிரதேச அரசுகள் நேரடி பணப் பரிமாற்றத்தை (DBT) ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ மாற்றுகின்றன. மாநில அளவில் மட்டுமே தனிப்பட்ட பயனாளிகள் பற்றிய தகவல் தொகுப்பு பராமரிக்கப்படுகிறது. இரண்டு திட்டங்களும் மாநிலங்கள் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. உரிய நேரத்தில் வெளிப்படையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் இந்த அமைச்சகத்தால் அவ்வப்போது வழங்கப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082786
----
TS/SV/KPG/DL
(Release ID: 2082923)
Visitor Counter : 18