சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: பொதுக் கட்டடங்களைப் பயன்பாட்டுக்காக அணுகுதல்

Posted On: 10 DEC 2024 4:04PM by PIB Chennai

அணுகக்கூடிய இந்தியா பிரச்சாரத்தின் கீழ்மாநில  மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்குச் சொந்தமான 1671 பொதுக் கட்டடங்களின் பயன்பாடு குறித்த தணிக்கையை மத்திய அரசு நடத்தியது. இதன் அடிப்படையில் 1314 கட்டிடங்களை அணுகுவதற்கான வசதிகளை உருவாக்குவதற்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு சொந்தமான 211 கட்டடங்களிலும், மத்திய பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படும் பிற துறைகள் / அமைச்சகங்களின் 889 கட்டடங்களிலும் மத்திய பொதுப்பணித்துறை இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

' பணிகள், நிலங்கள் மற்றும் கட்டடங்கள்' மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களின் விவகாரங்கள் ஆகும். மாநிலங்களுக்கு உதவும் வகையில்  மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையானது (DEPwD) கட்டிடங்கள் அணுகுதல் குறித்து தணிக்கை செய்ய 59 ஆடிட்டர்கள்/தணிக்கை நிறுவனங்களைப் பட்டியலிட்டு உள்ளது. இந்த பட்டியல் அனைத்து மாநிலங்கள்  யூனியன் பிரதேசங்கள், பிற அமைச்சகங்கள்  துறைகளின் பார்வைக்கென  சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****

 

TS/SV/KPG/DL


(Release ID: 2082885) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi