தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சர்வதேச தொலைத் தொடர்பு என்பதை வரையறை செய்வதைக் குறித்த பரிந்துரைகள்
Posted On:
10 DEC 2024 3:00PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சர்வதேச தொலைத்தொடர்பு என்பதை வரையறை செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத் துறை, 30.08.2022 தேதியிட்ட செய்திக் குறிப்பு மூலம், சர்வதேச மற்றும் உள்நாட்டு குறுந்தகவல்கள் அனுப்புவது குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 (திருத்தம்)படி பிரிவு 11(1)(a)-ன் கீழ் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.
இது தொடர்பாக, பொது மக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை கோரும் வகையில், 'சர்வதேச தொலைத்தொடர்பு சேவைக்கான வரையறை' குறித்த ஆலோசனை அறிக்கை 02.05.2023 அன்று வெளியிடப்பட்டது.
மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள், ஆட்சேபனைகள், பகுப்பாய்வு முடிவுகள் அடிப்படையில், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சர்வதேச தொலைத் தொடர்பு சேவைக்கான வரையறை குறித்த பரிந்துரைகளை இறுதி செய்தது.
இந்த பரிந்துரைகளின் நகல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
---
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2082868)
Visitor Counter : 23