கலாசாரத்துறை அமைச்சகம்
கலாச்சார முன்னேற்றதிற்கான தேசிய இயக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 DEC 2024 5:38PM by PIB Chennai
நாட்டின் வளமான பாரம்பரியத்தை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துவதையும், கிராமப்புற பொருளாதார நடவடிக்கைகள மறுஉருவாக்கம் செய்து புத்துயிர் அளிப்பதற்கும் அதன் படைப்பாற்றல் திறனை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, கிராமப்புறங்களை தற்சார்புடையதாக மாற்றும் வகையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தால் கலாச்சார அமைச்கத்தால் செயல் முறை ஒன்று தேசிய இயக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, கலாச்சார முன்னேற்றத்திற்கான தேசிய இயக்கம் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மாநில வாரியான விவரங்கள் அதன் இணைய தளமான (httpsmgmd.gov.in)-ல் கிடைக்கின்றன.
இதன் நோக்கங்கள், நோக்கங்கள், எதிர்பார்ப்புகள் பின்வருமாறு;
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் கிராமப்புற பொருளாதாரங்களை மறுஉருவாக்கம் செய்து புத்துயிர் பெறச் செய்வதற்கான அதன் ஆக்கப்பூர்வமான திறனை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துதல், இதன் மூலம் கிராம இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுதல்.
கலாச்சார பாரம்பரியத்தின் வலிமைகள் மற்றும் அதன் வளர்ச்சி மற்றும் கலாச்சார அடையாளத்துடன் தொடர்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
TS/SV/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2082504)
வருகையாளர் எண்ணிக்கை : 68