தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இடைக்காலத் தலைவர் திருமதி விஜயபாரதி சயானியின் செய்தி
Posted On:
09 DEC 2024 5:24PM by PIB Chennai
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 1950-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் இந்த குறிப்பிடத்தக்க நாள், 1948-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதை நினைவுகூருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நாள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்த ஆவணத்தை உருவாக்குவதில் இந்திய பிரதிநிதிகள் முக்கிய பங்களிப்பு செய்துள்ளனர். இது கண்ணியம், நீதி மற்றும் சமத்துவத்திற்கான மனிதகுலத்தின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை உள்ளடக்கியதாகும்.
ஒவ்வொரு தனிநபரும் உரிமைகளுடன் பிறக்கிறார் என்பதை மனித உரிமைகள் தினம் வலுவாக நினைவூட்டுகிறது . இந்த ஆண்டின் கருப்பொருள் - "எங்கள் உரிமைகள், எங்கள் எதிர்காலம், இப்போதே” என்பதாகும். மனித உரிமைகள் ஒரு விருப்பம் மட்டுமல்ல, ஆனால், சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு நடைமுறை கருவி என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. மனித உரிமைகளின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனை ஏற்றுக்கொள்வதன் மூலம், மிகவும் அமைதியான, சமத்துவமான மற்றும் நீடித்த உலகத்தை நாம் உருவாக்க முடியும். உலகளாவிய நடவடிக்கைக்கு புத்துயிர் அளிக்கவும், மனித கண்ணியத்தில் வேரூன்றிய எதிர்காலத்திற்காக அணிதிரளவும் இதுவே நேரமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082371
***
TS/IR/RJ/DL
(Release ID: 2082424)
Visitor Counter : 26