பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        இலங்கையின் குடிமைப் பணி அதிகாரிகளுக்கான  6 வது திறன் மேம்பாட்டு பயிற்சி முசோரியில் உள்ள சிறந்த ஆளுகைக்கான தேசிய பயிற்சி மையத்தில் தொடங்கியது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                09 DEC 2024 3:08PM by PIB Chennai
                
                
                
                
                
                
                சிறந்த ஆளுகைக்கான தேசிய மையத்தில்   இலங்கையின் இடைநிலை குடிமைப் பணி அதிகாரிகளுக்கான 6-வது திறன் மேம்பாட்டு  பயிற்சி திங்கட்கிழமை தொடங்கியது. 2024 டிசம்பர் 9-ம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி இம்மாதம் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு வாரகால திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் இலங்கையைச் சேர்ந்த 40 இடைநிலை அரசு அதிகாரிகள், செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பொது நிர்வாக அமைப்பு, விவசாயம், கால்நடை, சுகாதார அமைச்சகங்கள்  உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரிகள் இதில் பங்கேற்று உள்ளனர். 
சிறந்த ஆளுகைக்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திர குமார் பாக்டே, இந்த பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இதில்  பங்கேற்றுள்ள  அனைவரையும் அன்புடன் வரவேற்ற அவர், பல்வேறு களங்களில் இந்தியாவின் தலைசிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தும் வகையில், தலைமைப் பண்பு, நிர்வாகம் குறித்த விரிவான புரிதலை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 
அடிப்படை நிர்வாகம், சுகாதாரம், பொது நிர்வாக கட்டமைப்புகள் போன்ற முக்கிய அம்சங்களில் நுண்ணறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிற்சிகள் அமைந்துள்ளன என்று அவர் கூறினார். 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082309
**
TS/SV/KPG/KR
                
                
                
                
                
                (Release ID: 2082337)
                Visitor Counter : 69