கனரகத் தொழில்கள் அமைச்சகம்
மின்சார பேருந்துகள் திட்டத்தை செயல்படுத்துதல்
Posted On:
06 DEC 2024 5:39PM by PIB Chennai
மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக கனரக தொழில்துறை அமைச்சகம் பின்வரும் இரண்டு திட்டங்களை அறிவிக்கை செய்துள்ளது:
புதுமையான வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகன புரட்சி (PM E-DRIVE) திட்டம்: 29.09.2024 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், லாரிகள், பேருந்துகள் உள்ளிட்டவற்றின் விற்பனையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.10,900 கோடியாகும். இதில் 14,028 மின்சார பேருந்துகளை ஊக்குவிப்பதற்கு ஆதரவாக ரூ.4,391 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் மின்சார பேருந்துகள் ஊக்குவிப்பு திட்டம் 28.10.2024 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம், ரூ. 3,435.33 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. 38,000 க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் திரு.எச்.டி. குமாரசாமி இத்தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2081842)
Visitor Counter : 17