விவசாயத்துறை அமைச்சகம்
வெங்காய விவசாயிகளுக்கு உதவும் சிறப்பு திட்டம்
Posted On:
06 DEC 2024 6:03PM by PIB Chennai
வெங்காயம் உள்ளிட்ட அழுகும் தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சந்தை குறுக்கீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. முந்தைய சாதாரண பருவத்தின் சராசரி விலைகளுடன் ஒப்பிடும்போது சந்தை விலைகள் குறைந்தது 10% வீழ்ச்சியடையும் போது, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நஷ்டத்தில் விற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் நிதி இழப்புகள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 50:50 என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களுக்கு 75:25 பகிர்வு விகிதம் பொருந்தும். மாநிலங்கள் தங்கள் உற்பத்தியில் 25% வரை சந்தை குறுக்கீட்டு திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யலாம்.
மேலும், உயர் மதிப்பிலான வேளாண் விளைப் பொருட்களை (தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு) மாநிலங்களுக்கிடையே கொண்டு செல்வதற்கான போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை அரசே ஏற்றுக்கொள்கிறது. இது விவசாயிகளுக்கு ஆதாயமான விலையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், சந்தையில் நுகர்வோருக்கு உயர் பயிர்களின் விலையை குறைக்க உதவிடும்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
*****
PKV/AG/DL
(Release ID: 2081737)
Visitor Counter : 34