கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
உள்நாட்டுக் கப்பல் கட்டும் தளங்களுக்கு ஊக்கத்தொகை
இடுகை இடப்பட்ட நாள்:
06 DEC 2024 4:14PM by PIB Chennai
நாட்டின் கப்பல் கட்டும் துறையில் மாற்றம் செய்வதற்கான லட்சியத் திட்டங்களின் ஒரு பகுதியாக எரிபொருள் திறன் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கப்பல்களை உருவாக்குவதற்கு உள்நாட்டு கப்பல் கட்டும் தளங்களை ஊக்குவிக்க அரசு கூடுதல் சலுகைகளை வழங்கியுள்ளது. விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கை ஆகஸ்ட் 2023-ல் திருத்தப்பட்டது, 'மெத்தனால் / அம்மோனியா / ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் போன்ற பசுமை எரிபொருள்கள் மூலம் இயக்கப்படும் கப்பல்களுக்கு 30% நிதி உதவி' திருத்தத்தில் சேர்க்கப்பட்டது. இந்த திருத்தத்தில் 'முழுமையாக மின்சாரம் அல்லது கலப்பு உந்துவிசையால் இயக்கப்படும் கப்பல்களுக்கு 20% நிதி உதவி என்பதும்' அடங்கும்.
கடல்சார் அமிர்தகாலத் தொலைநோக்கின்படி, 2047-ம் ஆண்டுக்குள் வணிக கப்பல் கட்டும் துறையில் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இருக்க இந்தியா விரும்புகிறது. மேலும், "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் "கொள்கையை ஊக்குவிக்கவும், இந்தியாவில் கப்பல் கட்டும் தொழிலுக்கு ஆதரவளிக்கவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் இருந்து ஆர்டர்களை பெறவும், சர்வதேச சந்தையில் போட்டியிடவும், இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கான கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கையை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டம் 2016, ஏப்ரல் 1 முதல் 2026, மார்ச் 31 வரை கையெழுத்திடப்பட்ட கப்பல் கட்டும் ஒப்பந்தங்களுக்காக இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. நிதி உதவி விகிதம் 2016-ல் 20% -ல் தொடங்கி 2026-ல் 11% ஆகக் குறைகிறது. இதுவரை 45 கப்பல் கட்டும் தளங்கள் பதிவு செய்யப்பட்டு, 19 கப்பல் கட்டும் தளங்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று பயன்படுத்திக் கொண்டுள்ளன. மேலும், 144 கப்பல்களைக் கட்டுவதற்காக ரூ.385.16 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
********
TS/SMB/KV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2081733)
வருகையாளர் எண்ணிக்கை : 93