சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
குறிப்பிட்ட சில ரத்த புற்றுநோய்களுக்கு சிஏஆர் டி-செல் சிகிச்சை பலன் தருகிறது
Posted On:
06 DEC 2024 4:04PM by PIB Chennai
சிஏஆர் டி-செல் சிகிச்சையானது (சிமெரிக் ஆன்டிஜன் ஏற்பி டி செல் சிகிச்சை)ரத்தப் புற்றுநோய்களுக்கு எதிராக பயன் அளிக்கிறது. இந்தியாவில், 2015 முதல் மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் மும்பை டாடா நினைவு மையத்தின் ஆய்வாளர்கள் இணைந்து சிஏஆர் டி-செல் சிகிச்சையை உருவாக்கினர். அவர்கள் வெற்றிகரமாக சிடி 19-மூலம் இயக்கப்பட்ட சிஏஆர் டி-செல் சிகிச்சையை உருவாக்கியுள்ளனர். இது ஒரு வகை ரத்தப் புற்றுநோய்க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கிறது: சிகிச்சைக்கு முன் மருத்துவ மாதிரிகள் விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் மருத்துவ தர உற்பத்தி நிறுவனங்களில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது.
இந்த முயற்சிகள் மூலம், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மீது டி.எம்.சி.யில் முதல் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு மார்ச் 2021-ல் இந்த சிகிச்சைக்கு தொடர்புடைய அனைத்து குழுக்களின் ஒப்புதலையும், இறுதியாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநர் ஒப்புதலையும் பெற முடிந்தது. அரசு நிறுவனங்களின் பெரும் கல்வி மானியங்களின் உதவியுடன் இந்த சிகிச்சை வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, இந்தியாவிலேயே முழுமையாக சோதனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் அடிப்படையில், ரத்தப் புற்றுநோயில் பி-ஏஎல்எல் அல்லது பி-என்எச்எல் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு 2 ஆம் கட்ட சோதனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைகள் டாடா நினைவு மையம் மற்றும் வேறு சில மருத்துவமனைகளில் நடத்தப்படுகின்றன.
புற்றுநோய்க்கான சிஏஆர்-டி செல் சிகிச்சை குறித்த ஆராய்ச்சி திட்டங்களுக்கு உயிரி தொழில்நுட்பத் துறை ஆதரவளிக்கிறது ஆராய்ச்சி திட்டங்களைத் தவிர, மெய்நிகர் நெட்வொர்க் மையங்களை நிறுவவும் இத்துறை பரிந்துரைத்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081487
*****
TS/SMB/KV/DL
(Release ID: 2081668)