சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 312 பேர் காசநோயால் பாதிப்பு:
प्रविष्टि तिथि:
06 DEC 2024 4:01PM by PIB Chennai
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
- தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் கீழ்க்கண்ட நோக்கங்களுடன் செயல்படுத்தப்படுகிறது:
- காசநோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், தரமான உறுதியளிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளுடன் உடனடியாக சிகிச்சை அளித்தல்.
- தனியார் துறையில் சிகிச்சையை நாடும் நோயாளிகளுடன் தொடர்புகொள்ளுதல்;
- அதிக ஆபத்து / பாதிக்கப்படக்கூடியவர்களின் நோய் கண்டறிதல், தொடர்புத் தடமறிதல்; தொற்று கட்டுப்பாடு;
- சமூகக் காரணிகளை எதிர்கொள்வதற்கு பல்துறை பொறுப்பு.
2023 ஆம் ஆண்டில் உலகளாவிய காசநோய் பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் இந்தியாவின் பங்கு 26% ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய காசநோய் அறிக்கை 2024 தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் நாட்டின் பகுதிகளில் காசநோயின் பரவலை மதிப்பிடுவதற்காக 20 மாநிலங்களில் கணக்கெடுப்பை அமைச்சகம் நடத்தியது. நாட்டில் அனைத்து வயதினரையும் ஒரு சேர கணக்கில் கொண்டால் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 312 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்ப்பரவல் கணக்கெடுப்பின் அடிப்படையில், காசநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் திட்டங்கள் மறு-வரையறை செய்யப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் பின்வரும் தலையீடுகள் / நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
- மாநில மற்றும் மாவட்ட திட்டங்கள் மூலம் காசநோய் அதிகமாக உள்ள பகுதிகளில் இலக்கு குறுக்கீடுகள்.
- காசநோயாளிகளுக்கு இலவச மருந்துகள் வழங்குதல் மற்றும் நோய் கண்டறிதல் .
- பாதிக்கப்படக்கூடிய மற்றும் இணை நோயுற்ற மக்களிடையே பிரச்சாரங்கள் மூலம் காசநோய் கண்டறிதல்.
- ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திரை காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளுடன் ஒருங்கிணைத்தல்.
- காசநோயாளிகளை அறிவிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் ஊக்கத்தொகையுடன் தனியார் துறையை ஈடுபடுத்தல்.
- மூலக்கூறு கண்டறியும் ஆய்வகங்களை துணை மாவட்ட நிலைகளுக்கு விரிவுபடுத்துதல்.
- காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு அளிப்பதற்காக காசநோய் ஒழிப்பு ஊட்டச்சத்து திட்டத்தை விரிவுபடுத்துதல்.
- காசநோயை ஒழிப்பதற்கான அமைச்சகங்களின் முயற்சிகள் மற்றும் ஆதாரவளங்களை ஒருங்கிணைத்தல்.
- காசநோயாளிகள் மற்றும் எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய மக்களிடையே காசநோய் தடுப்பு சிகிச்சை அளித்தல்.
- நி-க்ஷய் போர்ட்டல் மூலம் அறிவிக்கப்பட்ட காசநோயாளிகளைக் கண்காணித்தல்.
- நி-க்ஷய மித்ரா முன்முயற்சியின் கீழ் காசநோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் ஊட்டச்சத்து, நோயறிதல் மற்றும் தொழில்முறை ஆதரவை வழங்குதல்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்தார்.
*******
TS/SMB/KV/DL
(रिलीज़ आईडी: 2081605)
आगंतुक पटल : 96