சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாவட்ட/சார்நிலை நீதிமன்றங்களில் நீதிபதிகள் எண்ணிக்கை 25725 ஆக அதிகரிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 DEC 2024 3:34PM by PIB Chennai

ஜஸ்வந்த் சிங் கமிஷன் அளித்த பரிந்துரைகளின்படியும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படியும் தேவையான செலவினங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மாநில அரசு ஒப்புதல் அளித்த முழுமையான கருத்துருவின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடனும் உயர்நீதிமன்ற அமர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. உயர்நீதிமன்ற அமர்வு உருவாக்க வேண்டும் என்ற முன்மொழிவு சம்பந்தப்பட்ட மாநில ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும். தற்போது, எந்த உயர் நீதிமன்றத்திலும் அமர்வுகள் ஏற்படுத்துவதற்கான  கருத்துரு அரசிடம் நிலுவையில் இல்லை.

தேவைகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் ஒப்பளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31லிருந்து 34 ஆகவும், உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 906லிருந்து 1122 ஆகவும் மே 2014 முதல் இன்று வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 2014 முதல் 18.11.2024 வரை 19,518-லிருந்து 25,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய படியாகும்.

இலவச சட்ட உதவிக்கான பல்வேறு முன்முயற்சிகள்/திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளதுடன், நீதித்துறை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி, அதன் மூலம் நீதிக்கான அணுகலை மேம்படுத்துகிறது. அரசால் நிறுவப்பட்ட நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கான தேசிய குழுமம், நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உத்தி ரீதியான முன்முயற்சிகள் மூலம் நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கான தேசிய குழுமம் நீதி வழங்கல் மற்றும் நிலுவையில் உள்ள நீதி நிர்வாகத்தை படிப்படியாக வழங்குவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.

நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், நீதிமன்ற அரங்குகள், நீதித்துறை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள், வழக்கறிஞர் அரங்குகள், கழிப்பறை வளாகங்கள் மற்றும் டிஜிட்டல் கணினி அறைகள் கட்டுவதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது.

பதினான்காவது நிதிக்குழுவின் ஆதரவில், கொடூரமான குற்ற வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன; மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி./எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளையும் விரைந்து விசாரிக்க, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அளவில் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. போக்சோ சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பாலியல் பலாத்காரம் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நாடு முழுவதும் பிரத்யேக விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வழக்குரைஞர்களிடையே பொதுநலப் பண்பாட்டை நிறுவனமயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுநலப் பணிகளுக்காக தங்கள் நேரத்தையும், சேவையையும் அளிக்க முன்வரும் வழக்கறிஞர்கள் நியாய பந்துவில் இலவசமாக வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்ளும் தொழில்நுட்ப கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நியாய பந்து சேவைகள் உமாங் தளத்திலும் கிடைக்கின்றன. மாநில அளவில் உயர்நீதிமன்றங்களில் பொதுநல வழக்குரைஞர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டப் பள்ளிகளில் பொதுநல மன்றங்களும் தொடங்கப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PKV/RR/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2081579) வருகையாளர் எண்ணிக்கை : 76
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी