தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
30.43 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
05 DEC 2024 5:47PM by PIB Chennai
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆதாருடன் இணைக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் விரிவான தேசிய தரவுத்தளத்தை உருவாக்குவதற்காக 2021 ஆகஸ்ட் 26 அன்று இ-ஷ்ரம் தளத்தை (eshram.gov.in) அறிமுகப்படுத்தியது. இ-ஷ்ரம் தளம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சுய அறிவிப்பு அடிப்படையில் யுனிவர்சல் கணக்கு எண்ணை வழங்குவதன் மூலம் பதிவு செய்து ஆதரிப்பதாகும். 2024 டிசம்பர் 1 நிலவரப்படி, 30.43 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
2024 டிசம்பர்1, நிலவரப்படி இந்த தளத்தில் பதிவு செய்துள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை 27.22 கோடியாக உள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
****
TS/IR/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2081349)
வருகையாளர் எண்ணிக்கை : 79