கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'இந்தியாவைக் கொண்டாடுதல்' தலைப்பிலான அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டி

Posted On: 05 DEC 2024 4:56PM by PIB Chennai

கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) 7 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 'இந்தியாவைக் கொண்டாடுதல்' என்ற தலைப்பில் அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கான பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்தும் இன்டாக் நிறுவனத்தின் பாரம்பரிய கல்வி மற்றும் தொடர்பு பிரிவு இதனை நடத்தி வருகிறது. 100 இன்டாக் பிரிவுகள் அந்தந்த நகரங்கள் / பிராந்தியத்தில் இந்த போட்டியை நடத்துகின்றன, இது மார்ச் 2025-ல் முடிவடையும்.

இப்போட்டி புதுதில்லியில் 71, இன்டாக், லோடி எஸ்டேட்டில் 2024  டிசம்பர் 6 அன்று நடைபெறும். புதுதில்லியில் உள்ள சுமார் 50 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். தங்கள் சுவரொட்டிகள் மற்றும் எழுத்துக்கள் மூலம் தில்லியின் கலாச்சார பாரம்பரியத்தை - உள்ளூர் திருவிழாக்கள், மரபுகள், சடங்குகள், சமூக நடைமுறைகள் அல்லது பழக்கவழக்கங்கள் போன்றவற்றை விளக்குவதன் மூலம் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துவார்கள்.

***

TS/IR/AG/DL


(Release ID: 2081339) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi , Bengali