சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் அனைத்து தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களும் பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 1,46,195 கிலோமீட்டராகும். 2023-24, 2024-25 (அக்டோபர், 2024 வரை) காலகட்டத்தில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் முறையே 12,349 கிலோ மீட்டர் 3,914 கிலோ மீட்டராகும்.
சாலை பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சாலை போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகளில் சில:
• சாலை பாதுகாப்பு அமைச்சகம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலை பாதுகாப்பு திட்டங்களை நிர்வகிக்கவும் பல்வேறு முகமைகளுக்கு நிதி உதவி அளிக்க , சாலை பாதுகாப்பு ஆலோசனை திட்டத்தை நிர்வகித்து வருகிறது.
• சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் / வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
• அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு போன்ற அனைத்து நிலைகளிலும் மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள் / வல்லுநர்கள் மூலம் சாலை பாதுகாப்பு தணிக்கை (ஆர்எஸ்ஏ) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
• தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துப் பகுதிகள் / விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2081197)
TS/PLM/KPG/DL