சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலா நண்பர் மற்றும் சுற்றுலா சகோதரி திட்டத்தின் கீழ் 3,500 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 05 DEC 2024 4:39PM by PIB Chennai

சுற்றுலா அமைச்சகம் சுற்றுலா நண்பர் / சுற்றுலா சகோதரி என்ற பெயரில் தேசிய பொறுப்புடைமை சுற்றுலா முயற்சியைத் தொடங்கியது. ஓர்ச்சா (மத்திய பிரதேசம்), கண்டிகோட்டா (ஆந்திரா), புத்த கயா (பீகார்), அய்ஸ்வால் (மிசோரம்), ஜோத்பூர் (ராஜஸ்தான்) மற்றும் ஸ்ரீ விஜயபுரம் (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்) ஆகிய 6 சுற்றுலா தலங்களில் இந்தச் சோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

விருந்தினர் கடவுளுக்கு சமம் என்ற உணர்வுடன், வாடகை வண்டி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள ஊழியர்கள், ஹோட்டல் ஊழியர்கள், உணவகத் தொழிலாளர்கள், ஹோம்ஸ்டே உரிமையாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், காவல்துறையினர், தெருவோர விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், மாணவர்கள் மற்றும் பலருக்கும் சுற்றுலாவின் முக்கியத்துவம், பொது தூய்மை, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிக உயர்ந்த தரமான விருந்தோம்பல் மற்றும் கவனிப்பை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் ஆகஸ்ட் 15, 2024 அன்று தொடங்கப்பட்டது, அதன் பின்னர், 3,500-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர். 2024 உலக சுற்றுலா தினத்தன்று, சுற்றுலா அமைச்சகம் ஜார்க்கண்டின் ராஞ்சி உட்பட நாட்டின் 50 சுற்றுலா தலங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்தியது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2081333) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi