கனரகத் தொழில்கள் அமைச்சகம்
ஆம்னி பேருந்துகளுக்கான தொழில்நுட்ப விதிமுறைகள் தொடர்பான கூட்டம் தில்லியில் நடைபெற்றது
Posted On:
05 DEC 2024 5:35PM by PIB Chennai
சுவீடன் நாட்டின் பிரதிநிதிகளுடன் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் கூட்டுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. ஆம்னி பேருந்துகளின் தொழில்நுட்ப விதிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முக்கிய தொழில்நுட்பங்களின் உற்பத்தியில் ஸ்வீடன் முன்னிலையில் உள்ளதாக அந்நாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். இது போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும், உற்பத்தித் துறையில் தரப்படுத்தப்பட்ட விதிமுறைகளைப் பராமரிப்பதிலும் இந்தியாவுக்கு ஆதரவளிப்பதற்கான ஸ்வீடனின் உறுதிப்பாட்டை அந்தக் குழுவினர் மீண்டும் உறுதி செய்தனர்.
ஆம்னி பேருந்துகளின் தொழில்நுட்ப விதிமுறைகள் (OTR) பற்றி: உற்பத்தித் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் அரசின் தொலைநோக்குப் பார்வையை அடையும் இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. 2024 ஆகஸ்ட் 28 அன்று அறிவிக்கப்பட்ட இயந்திரங்கள், மின் உபகரணங்கள் பாதுகாப்புக்கான ஆம்னி பேருந்து தொழில்நுட்ப ஒழுங்குமுறை, இந்தப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஒழுங்குமுறை 2025 ஆகஸ்ட் 28 முதல் நடைமுறைக்கு வரும். இது 90 பாதுகாப்பு தரங்களைக் குறிப்பிடும் 444-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உள்ளடக்கியதாகும்.
****
TS/PLM/KPG/DL
(Release ID: 2081328)
Visitor Counter : 19