புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: வளர்ச்சியடைந்த பாரதம்

வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான புவி அறிவியல் அமைச்சத்தின் செயல்பாடுகள்

Posted On: 05 DEC 2024 3:28PM by PIB Chennai

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்கு பார்வையை அடைய கடந்த ஐந்து ஆண்டுகளில் புவிஅறிவியல் அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. அவற்றுள் முக்கிய அம்சங்கள் சில:

•    டாப்ளர் வானிலை ரேடார் கட்டமைப்பை 39 ஆக உயர்த்துதல்

•    மின்னல் உணரி கட்டமைப்பை நிறுவுதல்

•    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் ஒருங்கிணைந்து வெப்ப செயல் திட்டங்களை அமல்படுத்துதல்

•    வெப்பமண்டல சூறாவளிகளின் துல்லியமான, சரியான கணிப்பு

•    முன்னறிவிப்பு துல்லியத்தில் ஒட்டுமொத்தமாக 40% முன்னேற்றம்

•    குறுகிய தூரத்திலிருந்து நடுத்தர, நீட்டிக்கப்பட்ட வரம்பு, பருவகால முன்னறிவிப்புகளுக்கான அதிநவீன இயக்கவியல் முன்கணிப்பு அமைப்புகளை உருவாக்குதல்

•    விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான வேளாண் வானிலை ஆலோசனைகளை வழங்குதல்

•    பருவநிலை கணிப்புகளுக்கான இந்தியாவின் முதல் புவி அமைப்பு மாதிரியின் வளர்ச்சி

•    வானிலை மாற்றத்தின் அறிவியலைப் புரிந்துகொள்வதற்காக கிளவுட் ஏரோசல் தொடர்பு மழைப்பொழிவு மேம்பாட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது

•    நிலம்-வளிமண்டல தொடர்புகளை நிர்வகிக்கும் செயல்முறைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக வளிமண்டல ஆராய்ச்சியை நிறுவுதல்

•    ஆழ்கடல் வளங்களை ஆராய்ந்து பயன்படுத்துவதற்கான இந்தியாவின் லட்சியத் திட்டமான ஆழ்கடல் இயக்கம் தொடங்கப்பட்டது

•    மத்திய இந்தியப் பெருங்கடலில் 5270 மீட்டர் ஆழத்தில் ஆழ்கடல் சுரங்க அமைப்பின் இடப்பெயர்வு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன

•    சுமார் 7 லட்சம் மீனவர்களுக்கு மீன்பிடி மண்டல ஆலோசனை

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

**

TS/PLM/KPG/DL


(Release ID: 2081293) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi , Manipuri