சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
தொலைச்சட்டத் திட்டத்தின் கீழ் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி
Posted On:
05 DEC 2024 4:13PM by PIB Chennai
தொலைச்சட்டத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு வழிவகை செய்துள்ளது. வழக்குரைஞர்கள் குழு, தொலை சட்டத் திட்டத்தில் சேவையாற்றுவதற்காக பணியமர்த்தப்பட்டவுடன், அவர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிராந்திய மொழியில் சிறப்பாக வாதிடுதல், மத்திய, மாநில மற்றும் உள்ளூர் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த அறிவு, வழக்கிற்கு முந்தைய சேவைகளை வழங்குவதல் ஆகியவற்றில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2024 அக்டோபர் 31, நிலவரப்படி, தமிழ்நாட்டில் இருந்து வழக்கிற்கு முந்தைய ஆலோசனை பெற்ற தனிநபர்களின் எண்ணிக்கை 2,75,109 ஆகும்.
கிராமப்புற பெண்களை சென்றடையவும், தொலைச்சட்ட திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 790 வழக்கறிஞர்கள் குழுவில் 38 சதவீதம் பேர் பெண் வழக்கறிஞர்கள் ஆவர். கூடுதலாக, பொதுச் சேவை மையங்களை நடத்தி வரும் சுமார் 33,866 மகளிர் கிராம அளவிலான தொழில் முனைவோருக்கு தொலைச் சட்ட சேவைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வழக்கமான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்படுகின்றன, 2021 முதல் நாடு முழுவதும் 2418 பயிற்சிகள் மற்றும் 3429 விழிப்புணர்வு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 31.10.2024 வரை தொலைச் சட்டத் திட்டத்தின் கீழ் 1,01,46,785 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இதில் 39,63,499 பெண் பயனாளிகளாவர்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/IR/AG/DL
(Release ID: 2081242)
Visitor Counter : 16