அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நாடாளுமன்ற கேள்வி:அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகள்
Posted On:
05 DEC 2024 3:25PM by PIB Chennai
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சூழலை மாற்றியமைப்பதில் உயிரி தொழில்நுட்பம் மாற்றத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது. சுகாதாரம், வேளாண்மை, தொழில் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் முன்னேற்றங்களுக்கு உதவுகிறது. அறிவால் இயக்கப்படும் பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் உயிரி தொழில்நுட்பம் ஒருங்கிணைந்ததாக உள்ளது. புதுமை கண்டுபிடிப்புகள் மூலம் சமூக சவால்களை எதிர்கொள்வதன் வாயிலாக, உயிரி தொழில்நுட்பம் ஒரு நிலையான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை வடிவமைக்க உதவுகிறது. இந்தியாவின் அறிவியல் சூழலில் உயிரி தொழில்நுட்ப தாக்கத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
சுகாதாரத்தில் முன்னேற்றங்கள்: தடுப்பூசி உற்பத்தி மற்றும் பொதுவான மருந்துகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. உயிரி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறைந்த விலையிலான தடுப்பூசிகளின் மேம்பாட்டிற்கு உதவியது. இந்திய மக்கள்தொகைக்கான மரபணு மாறுபாடுகளின் விரிவான பட்டியலை உருவாக்க ஜீனோம் இந்தியா போன்ற முயற்சிகள் மரபணு நோய்கள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தி, துல்லியமான மருத்துவத்திற்கு வழி வகுத்துள்ளன. பயோடெக் புத்தொழில்கள் கோவிட் -19 க்கான ஆர்டி-பி.சி.ஆர் கருவிகள் போன்ற விரைவான மற்றும் செலவு குறைந்த கண்டறியும் கருவிகளை உருவாக்கியுள்ளன. இது சுகாதார விநியோகத்தை மேம்படுத்துகிறது.
வேளாண்மையில் புரட்சியை ஏற்படுத்துதல்: பிடி பருத்தியின் அறிமுகம் பூச்சி எதிர்ப்பை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் வேளாண்மை உற்பத்தியை கணிசமாக உயர்த்தியது. உயிர் உரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி தொழில்நுட்பங்கள் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் மூலம் நிலையான வேளாண்மை நடைமுறைகளை ஊக்குவித்துள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081063
***
TS/IR/AG/RR
(Release ID: 2081222)
Visitor Counter : 27