மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலையான மீன்பிடிதொழில் மற்றும் கால்நடை வளர்ப்புக்கான முயற்சிகள்

प्रविष्टि तिथि: 05 DEC 2024 1:39PM by PIB Chennai

மத்திய அரசின் மீன்வளத்துறை, ரூ.20050 கோடி முதலீட்டில், 2020-21-ம் நிதியாண்டு முதல் 5 ஆண்டு காலத்திற்கு மீன்வளத் துறையில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மீன் உற்பத்தித் திறனை அதிகரிக்க தரமான மீன் குஞ்சு பொரிப்பகங்கள், நன்னீர் பரப்பை விரிவுபடுத்துதல், உவர்நீர் மீன் வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்த்தல், வண்ண மீன் இனப்பெருக்கம் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த வளர்ப்பு முறைகளுக்கு இத்திட்டத்தில் ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கடலோர மாநிலங்கள்  யூனியன் பிரதேசங்களில் மீன் இருப்பை மறுசீரமைக்க செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் பருவமழை  மீன் இனப்பெருக்க காலங்களில் ஒரே சீரான மீன்பிடி தடைக்காலத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

கூடுதலாக, 2023-24-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரை நான்கு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்த பிரதமரின் மீன் வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற துணைத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறையின் மதிப்புக்கூட்டு  சங்கிலி செயல்திறனை மேம்படுத்துவதற்காக நீர்வாழ் உயிரின வளர்ப்பு குறுந்தொழில்களை மானியங்கள் மூலம் ஊக்குவிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாநிலங்களவையில் 2024 டிசம்பர் 04 அன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

----

TS/PLM/KPG/RR/DL


(रिलीज़ आईडी: 2081213) आगंतुक पटल : 78
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी