மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரங்கீன் மச்சிலி செயலி

Posted On: 05 DEC 2024 1:42PM by PIB Chennai

மத்திய அரசின், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின், மீன்வளத் துறையின் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனம், வண்ண மீன் பராமரிப்பு குறித்த பன்மொழி, தகவல்களை வழங்கும் நோக்குடன் ரங்கீன் மச்லி செயலியை உருவாக்கியுள்ளது. இநத செயலி 8 இந்திய மொழிகளில் உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் பரந்த அளவில் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

ரங்கீன் மச்லி செயலியின் நோக்கங்கள் வருமாறு

(i) பிரபலமான வண்ண மீன் இனங்கள், அவற்றின் பராமரிப்பு பற்றிய தகவல்களை வழங்குதல்.

(ii) மீன்களின் உள்ளூர் வணிகங்களை மேம்படுத்துதல்.

(iii) வண்ண நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில் நுட்ப அறிவை மேம்படுத்துவதன் மூலம் மீன்வளர்ப்போருக்கும் கடை உரிமையாளர்களுக்கும் அதிகாரம் அளித்தல்.

(iv)வண்ண மீன் தொழிலில் புதிதாக வருபவர்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும் வழிகாட்டுதல் கருவியாக செயல்படுதல்.

மீன் கடைகளைக் கண்டுபிடிக்கும் அம்சம் போன்றவையும் இதில் உள்ளன.  இந்தச் செயலி வண்ண மீன் வர்த்தகத்தில் நிலைத்தன்மையுயம் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

மாநிலங்களவையில் 2024 டிசம்பர் 04 அன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இத்தகவலைத் தெரிவித்தார்

-----

(Release ID 2081011)

TS/PLM/KPG/RR


(Release ID: 2081125) Visitor Counter : 31


Read this release in: Hindi , English , Urdu