உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீடு

Posted On: 05 DEC 2024 12:32PM by PIB Chennai

நாட்டில் உணவு பதப்படுத்தும் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்  2016-17-ம்  ஆண்டு முதல் மத்திய அரசின் ஒருங்கிணைந்த திட்டமான பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2021-22-ம் ஆண்டு முதல் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு உற்பத்தியுடன்  இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அத்துடன் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 31-ம் தேதி வரை பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.732.17 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 31-ம் தேதி வரை 2,335.18 கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 

நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை உணவு பதப்படுத்தும் துறையில் ரூ.368.37 கோடி அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு நவ்னீத் சிங் பிட்டு இந்தத் தகவலைத் தெரிவித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080971

----

TS/PLM/KPG/RR

(Release ID 2080971)


(Release ID: 2081038) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi , Manipuri