நிதி அமைச்சகம்
புதுதில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 67-வது நிறுவன தினத்தை வருவாய் செயலாளர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா தொடங்கி வைத்தார்
Posted On:
04 DEC 2024 6:49PM by PIB Chennai
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சி.பி.ஐ.சி) தலைமை நிறுவனமான வருவாய்புலனாய்வு இயக்குநரகத்தின் (டி.ஆர்.ஐ) 67-வது நிறுவன தின கொண்டாட்டங்களை நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலாளர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
சி.பி.ஐ.சி தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால், சிபிஐசி உறுப்பினர் திரு சஷாங்க் பிரியா, டி.ஆர்.ஐ உறுப்பினர் மற்றும் முதன்மை தலைமை இயக்குநர் திரு மோகன் குமார் சிங், சி.பி.ஐ.சி மற்றும் பிற இந்திய சட்ட அமலாக்க முகமைகளின் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 13 வெளிநாட்டு சுங்க நிர்வாகம் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் விழாவில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. மல்ஹோத்ரா, டி.ஆர்.ஐ அமைப்பின் 67-வது நிறுவன தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்ததுடன், போதைப்பொருள் கடத்தல் என்பது வெறும் சட்ட அமலாக்க பிரச்சினை மட்டுமல்ல, நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சமூக சவால் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார். நாட்டின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் போதைப்பொருள் கும்பல்களை ஒழிப்பதில் டி.ஆர்.ஐ.யின் இடைவிடாத முயற்சியை பாராட்டிய திரு மல்ஹோத்ரா, குற்றங்களின் சூத்திரதாரிகளையும், முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வனவிலங்கு உயிர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வனவிலங்கு கடத்தலைக் கையாள்வதில் டி.ஆர்.ஐ.யின் பங்களிப்பை வருவாய் செயலாளர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியான தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மல்ஹோத்ரா, கண்டறிதல் மற்றும் அமலாக்க திறன்களை மேம்படுத்த அதன் செயல்பாடுகளில் இயந்திர கற்றல் (எம்.எல்) மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை டி.ஆர்.ஐ ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080783
***
TS/BR/RR
(Release ID: 2080964)
Visitor Counter : 18