மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
விலங்குகள் ஆரோக்கியப் பாதுகாப்பு
Posted On:
04 DEC 2024 5:01PM by PIB Chennai
தொற்று நோய்த் தடுப்புக்கான தயார்நிலை மற்றும் விலங்குகள் சுகாதார பாதுகாப்பு குறித்த தொற்றுநோய் தடுப்பு நிதித் திட்டத்தின் மூலம் எதிர்கொள்வதற்காக நாட்டில் விலங்குகளின் சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான விவரங்கள் பின்வருமாறு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன:
"இந்தியாவில் தொற்றுநோய் தடுப்பு தயார்நிலை மற்றும் எதிர்வினைக்காக விலங்குகளின் சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துதல்" என்ற ஜி-20 தொற்றுநோய் தடுப்பு நிதித் திட்டத்தை இத்துறை தொடங்கியுள்ளது:
நோய் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல்.
தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு கோமாரி நோய், புருசெல்லோசிஸ், பிபிஆர் மற்றும் சிஎஸ்எஃப் ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பூசி, செரோசர்வைலன்ஸ் மற்றும் செரோமானிட்டரிங் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 99.17 கோடி, 4.36 கோடி, 18.40 கோடி, 0.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் முறையே எஃப்எம்டி, புருசெல்லோசிஸ், பிபிஆர் மற்றும் சிஎஸ்எஃப் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
**
TS/IR/KPG/DL
(Release ID: 2080856)
Visitor Counter : 19