தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மின்னணு தொலைத்தொடர்பு கொள்கை, 2018

Posted On: 04 DEC 2024 4:30PM by PIB Chennai

அனைத்துப் பகுதிகளிலும் நெகிழ் தன்மையுடன் கூடிய, பாதுகாப்பான, குறைந்த செலவில் மின்னணு தகவல் தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் மக்கள் மற்றும் நிறுவனங்களின் தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையுடன் தேசிய மின்னணு தகவல் தொடர்பு கொள்கை-2018 மத்திய அரசால் 2018-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளதுடன், நாடு முழுவதும் தொலைத் தொடர்பு சேவைகள் குறைந்த செலவில் கிடைக்க வகை செய்கின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம்  குறைந்த செலவில் அகண்ட அலைவரிசை இணையதள சேவைகளை அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கண்ணாடி இழைநார் இணைய வழி வசதிகள் 2018-ம் ஆண்டு மார்ச்ச மாதத்தில் 17.5 லட்சம் கிலோ மீட்டர் அளவில் இருந்தது. இது 2024 அக்டோபரில் 41.9 லட்சம் கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

2018 அக்டோபரில் 19.8 லட்சமாக இருந்த அடிப்படை சமிக்ஞை பெறும் நிலையங்கள் 2024 அக்டோபரில் 29.4 லட்சமாக அதிகரித்துள்ளன.

2024 செப்டம்பர் மாத நிலவரப்படி, நாட்டில் மொத்தம் உள்ள 6,44,131 கிராமங்களில் 6,22,840 கிராமங்களுக்கு மொபைல் இணைப்புக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2018-ம் ஆண்டு செப்டம்பரில் 48 கோடியாக இருந்த அகண்ட அலைவரிசை பயன்படுத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2024 ஜூன் மாதத்தில் 94 கோடியாக உயர்ந்துள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.

------

TS/SV/KPG/DL


(Release ID: 2080852) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi , Bengali