அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அடுத்த தலைமுறை மின்னணு சாதனங்களுக்கான பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
Posted On:
04 DEC 2024 4:53PM by PIB Chennai
அடுத்த தலைமுறை மின்னணு சாதனங்களுக்கான உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது ஆற்றல் திறன் கொண்ட மின்னணுவியல், மீள் தன்மை கொண்ட சாதனங்கள் மற்றும் சென்சார்கள் போன்றவற்றுக்கு சாத்தியமான தீர்வுகளைக் கொண்டுவருகிறது.
சிறந்த மின்னணு பண்புகளைக் கொண்ட பொருட்களுக்கான அதிகரித்து வரும் தேவை காரணமாக மேம்படுத்தப்பட்ட உபகரணங்களின் பயன்பாடு அதிகரிக்க வழி வகுத்துள்ளது. இரு பரிமாணப் பொருட்கள் மற்றும் இயந்திர பண்புகள் காரணமாக அவை மீள்தன்மையுடன் கூடிய மின்னணுவியல், ஆற்றல் சேமிப்பு மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களைக் கொண்டு வருகின்றன. மேலும், உயர் மின் கடத்தும் திறன் மற்றும் மாற்றக்கூடிய திறன் கொண்ட மின்னணு சாதனங்கள் போன்றவற்றின் தனித்துவமிக்க பண்புகள் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பத் துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கின்றன.
இரு பரிமாணப் பொருட்களின் அமைப்புகள் மாறுபட்ட 2 தனித்துவமிக்க பண்புகளைக் கொண்டுள்ளது.
மொஹாலியில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள், ஜானஸ் எஸ்.பி.2 எக்ஸ்.எஸ்.எக்ஸ் இன் கட்டமைப்பு, மின்னழுத்தம், மின்னணு பண்புகளை ஆய்வு செய்தனர். ஜானஸ் கட்டமைப்பின் தனித்துவமிக்க பண்புகள் அடுத்த தலைமுறை மின்னணு சாதனங்களுக்கான நம்பிக்கைக்குரிய பொருட்களாக அமைகிறது.
***
TS/SV/KPG/DL
(Release ID: 2080826)