தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களின் தொலைதூர பகுதிகளில் அஞ்சல் நிலையங்கள்

Posted On: 04 DEC 2024 4:30PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்தியத்தில் 8755 அஞ்சல் நிலையங்களும், ஜம்மு காஷ்மீரில் 1617 அஞ்சல் நிலையங்களும் அஞ்சல், நிதி மற்றும் காப்பீட்டு சேவைகளை வழங்குவதற்காக செயல்பட்டு வருகின்றன.

ஜம்மு - காஷ்மீரில் 1,20,355 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய 1617 அஞ்சல் நிலையங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு அஞ்சல் நிலையமும் சராசரியாக 74.43 சதுர கி.மீ. பரப்பளவிற்கு சேவையாற்றுகிறது. எனவே, ஒவ்வொரு அஞ்சல் நிலையத்தின் ஆரம் சராசரியாக 4.86 கி.மீ. ஆகும்

 புதிய அஞ்சல் நிலையங்களைத் திறப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். தேவைப்படும் பகுதிகளில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி புதிய அஞ்சல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.  2023-24-ம் நிதியாண்டில், ஜம்மு & காஷ்மீரின் தொலைதூர மற்றும் வங்கி சேவை இல்லாத பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களின் அணுகலை அதிகரிக்க 34 புதிய அஞ்சல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.வடகிழக்கு பிராந்தியத்தில்  2,62,190 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 8755 அஞ்சலகங்கள் செயல்படுகின்றன. ஒரு அஞ்சல் நிலையம் சராசரியாக 29.95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு சேவை வழங்குகிறது.  எனவே, ஒவ்வொரு அஞ்சல் நிலையத்தின் ஆரம் சராசரியாக 3.09 கி.மீ.  ஆகும் . 2023-24-ம் நிதியாண்டில், வடகிழக்கு பிராந்தியத்தின் தொலைதூர மற்றும் வங்கி சேவை இல்லாத பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களின் அணுகலை அதிகரிக்க 1631 புதிய அஞ்சல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.

----

TS/IR/KPG/DL


(Release ID: 2080824) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi