தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக தொலைத்தொடர்புத் துறை கடந்த 5 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது
Posted On:
04 DEC 2024 4:30PM by PIB Chennai
நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்கும் அதன் தரத்தை உயர்த்துவதற்கும் தொலைத்தொடர்புத்துறை கடந்த 5 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு -
- நாட்டின் தொலைதூர, கிராமப்புற பகுதிகளில் அதிவேக இணையம் / தரவுமொபைல் சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், எல்லைப் பகுதிகள், பிற முன்னுரிமைப் பகுதிகளில் மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
- வடகிழக்கு பிராந்தியம், அந்தமான் – நிக்கோபார், லட்சத்தீவு தீவுகளில் மொபைல் இணைப்புக்கான விரிவான தொலைத் தொடர்பு மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும், பழங்குடியினர் பகுதிகள் உள்ளிட்ட கிராமங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்கும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2080800)
Visitor Counter : 17