கூட்டுறவு அமைச்சகம்
மீன்வளத்திற்கான தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம்
Posted On:
04 DEC 2024 3:58PM by PIB Chennai
தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தின் துணை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலமும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்த மாதிரி துணை விதிகளை ஏற்றுக்கொண்டதன் மூலமும், தற்போது மீன்வளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்மேற்கொள்ள முடியும்.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், தேசிய அளவிலான கூட்டமைப்புகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து, பொதுக் கணக்கெடுப்புக்கான மாதிரி துணை விதிகளை தயாரித்து அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் 25-க்கும் மேற்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும், வெளிப்படைத்தன்மை மற்றும் அவற்றின் செயல்பாடுகளில் பொறுப்புடைமையை மேம்படுத்தவும் உதவுகிறது. பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை மேலும் உள்ளடக்கியதாகவும், விரிவானதாகவும் மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 32 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மாதிரி துணை விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080617
***
TS/SV/RR/KV/DL
(Release ID: 2080750)
Visitor Counter : 39