புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தில் தரங் வசதி

Posted On: 04 DEC 2024 3:34PM by PIB Chennai

தரங் என்பது 64-பிட் இயந்திரமாகும். இது மல்டி-டாஸ்கிங், மல்டி-புரோகிராமிங், மல்டி-யூசர், நேரப் பகிர்வு சூழலை ஆதரிக்கும் திறன் கொண்டது. மேலும் அளவிடக்கூடிய செயலாக்க  அம்சங்கள், அளவிடக்கூடிய உயர் செயல்திறன் ஆகியவற்றைக் கொண்ட நிரூபிக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

அதிநவீன கடல் பொது சுழற்சி மாதிரிகள், கடல்-வளிமண்டல இணைந்த மாதிரிகள் மற்றும் அலை மாதிரிகளை இயக்கவும், கடல் மாறிகள் மற்றும் தீவிர கடல் வானிலை ஆகியவற்றை செயல்பாட்டு ரீதியாக முன்னறிவிப்பதற்கும், ஆழ்கடல் இயக்கம், வானிலை இயக்கம், பருவமழை இயக்கம் போன்ற முக்கிய முயற்சிகளின் நோக்கங்களை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) இந்த புதிய அமைப்பைப் பயன்படுத்தும்.

இந்த வசதி புயல், உயர் அலைகள், தீவிர நீரோட்டங்கள் குறித்த முன்னெச்சரிக்கையுடன் கூடுதலாக சேவை நிலை 3 சுனாமி எச்சரிக்கை சேவைகளை வழங்க இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்துக்கு தரங் உதவும். தரங்கின் பணிகள் பின்வருமாறு:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மற்ற 25 நாடுகளுக்கு சுனாமி முன்னெச்சரிக்கைகளை வழங்குவதற்கான செயல்பாட்டு மாதிரிகள்,

இயற்பியல் செயல்முறைகளின் மிகவும் துல்லியமான மேம்பட்ட தரவு ஒருங்கிணைப்பு நுட்பங்கள்

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இத்தகவலை தெரிவித்தார்.

***

TS/PLM/AG/KV/DL


(Release ID: 2080740) Visitor Counter : 19


Read this release in: English , Urdu , Hindi