புவி அறிவியல் அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி:பேரிடர் அபாயக் குறைப்பு தொடர்பான குழு
Posted On:
04 DEC 2024 3:38PM by PIB Chennai
உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பல்வேறு மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து பனிப்பாறை வெள்ள அபாயக் குறைப்புக்கு பல்துறை அணுகுமுறையை வழங்க பேரிடர் அபாய குறைப்பு குழுவை அமைத்துள்ளது. இதுவரை 8 கூட்டங்கள் பேரிடர் தணிப்பை மையமாகக் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் நடைபெற்றுள்ளன. 2024 நவம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பேரிடர் குறைப்புக்கான முயற்சிகளை மதிப்பாய்வு செய்யவும், 'பனிப்பாறை ஏரி பேரிடர் வெள்ளக் குறைப்புக்கான யோசனைகள்' என்ற தலைப்பில் சர்வதேச பயிலரங்கை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்பாடு செய்தது. இப்பயிலரங்கில், நேபாளம், பூடான், கஜகஸ்தான், பெரு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து நிபுணர்கள் வருகை தந்து, ஆண்டிஸ், ஆல்ப்ஸ் மற்றும் இமயமலையில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இத்தகவலை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080595
----
TS/IR/KPG/KV
(Release ID: 2080705)
Visitor Counter : 32