ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் அமைச்சகத்தின் சாதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்
प्रविष्टि तिथि:
04 DEC 2024 2:40PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் சாதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மக்கள் தொகையில் பாதி பேருக்கு முழுமையான நீதி வழங்குவதும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதும் தங்களது முதன்மை இலக்கு என்று திரு சவுகான் கூறினார். இந்த ஆண்டு அமைச்சகத்தின் பட்ஜெட் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் கோடி என்றும், இதில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் திரு சவுகான் தெரிவித்தார். கிராமப்புற மக்களை வேலை வாய்ப்புகள் மற்றும் அத்தியாவசிய வசதிகளுடன் இணைப்பதன் மூலம் பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற தாங்கள் இரவும் பகலும் உழைத்து வருவதாக கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை எந்த மாநிலமாவது கண்டறிந்து தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசின் கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற திட்டங்கள் தேவை அடிப்படையிலானவை என்றும், ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டால், மாநிலங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் நிதி அமைச்சகத்திடமிருந்து கூடுதல் நிதி கோரப்படும் என்றும், அதற்கேற்ப தொடர்ந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிவ்ராஜ் சிங் சவுகான் அமைச்சகத்தின் முக்கிய சாதனைகளை எடுத்துரைத்தார்.
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் – ஊரகத் திட்டத்தின் கீழ், 2024 மார்ச் மாதத்திற்குள் 2.95 கோடி வீடுகளைக் கட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், அவற்றில் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 2.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் திரு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் வெற்றியையும், கிராமப்புற வீட்டுவசதிக்கான தேவையையும் அங்கீகரித்து, திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி கூடுதல் வீடுகள் கட்டப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080563
-----
TS/IR/KPG/KV
(रिलीज़ आईडी: 2080635)
आगंतुक पटल : 63