சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்
Posted On:
04 DEC 2024 1:53PM by PIB Chennai
கடந்த பத்து ஆண்டுகளிலும், நடப்பாண்டிலும் சிறுபான்மை சமூகங்களுக்காக பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன:
i) நயி மன்சில் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. இது முறையான பள்ளி சான்றிதழ் இல்லாத சிறுபான்மயின மாணவர்களுக்கு பயனளிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 98,712 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ii) உஸ்தாத் (USTTAD) திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது. இது கைவினைஞர்களின் திறன் மேம்பாட்டை இலக்காகக் கொண்டது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 21,611 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் வெளிப்படையான செயல்முறை மூலம் அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட அமலாக்க முகமைகள் (PIAs) மூலம் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இந்தத் திட்டங்கள் இப்போது பிரதமரின் விராசத் கா சம்வர்தன் (PM VIKAS) என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் விகாஸ் என்பது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் ஒரு முதன்மைத் திட்டமாகும்,
சிறுபான்மையினர் நல அமைச்சகம் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. கீழ்க்கண்ட முதன்மை நோக்கங்களுக்காக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
1. கல்வி உதவி திட்டங்கள்:
2. வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு திட்டங்கள்:
3. சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
4. சிறப்புத் திட்டங்கள்
இத்திட்டங்களின் விவரங்கள் அமைச்சகத்தின் இணையதளமான www.minorityaffairs.gov.in -ல் விரிவாக இடம்பெற்றுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/AG/KV
(Release ID: 2080618)