சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற கேள்வி: நாடு முழுவதும் காது கேளாதோருக்கான சைகை மொழிக்கான ஏற்பாடு

Posted On: 04 DEC 2024 2:44PM by PIB Chennai

 

மாற்றுத்திறனாளிகள் குறித்த புள்ளிவிவரங்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளை அரசு முதன்மையாக நம்பியுள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மொத்தம் 2.68 கோடி மாற்றுத் திறனாளி நபர்களில் 19 சதவீதத்தினர் செவித்திறன் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சைகை மொழி உரைபெயர்ப்பு பட்டயப் படிப்பை 42 நிறுவனங்களும், காது கேளாதோருக்காக இந்திய சைகை மொழி கற்பித்தல் பட்டயப் படிப்பை 13 நிறுவனங்களும் நடத்துகின்றன. 2024-25-ம் ஆண்டில், சைகை மொழி உரைபெயர்ப்பு பட்டயப் படிப்பை நடத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 முதல் 13 ஆகவும், இந்திய சைகை மொழி கற்பித்தல் பட்டயப் படிப்பை நடத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை 20 இல் இருந்து 42 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ISLRTC) காது கேளாமை மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:

1.    தற்போது, 665 மாணவர்கள் இத்துறையின் கீழ் உள்ள தேசிய நிறுவனங்கள் மற்றும் கூட்டு மண்டல மையங்களில் டிஸ்லி மற்றும் டி.டி.ஐ.எஸ்.எல் ஆகியவற்றில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

2.    பெரு நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களில் இலவச விழிப்புணர்வு அமர்வுகளை நடத்தி, காது கேளாமை மற்றும் சைகை மொழி குறித்து 1,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

3.    ஐ.எஸ்.எல்.ஆர்.டி.சி உருவாக்கிய ஐ.எஸ்.எல் அகராதி பிராந்திய மொழி பயனர்களுக்கு அணுகலை எளிதாக்குவதற்கும் அதன் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கும் (ஏற்கனவே சேர்க்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர) 10 கூடுதல் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 10 மொழிகள் ஐஎஸ்எல் அகராதி புதுப்பிக்கப்பட்டுள்ளன.

4.    ISLRTC ஒவ்வொரு ஆண்டும் காது கேளாத பள்ளி குழந்தைகள் மற்றும் DISLI, DTISL, D.Ed/B.Ed/M.Ed சிறப்புக் கல்வி (HI) போன்ற ISL படிப்புகளின் பயிற்சியாளர்களுக்காக ISL போட்டியை நடத்துகிறது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் சைகை மொழி உரைபெயர்ப்பு பட்டயப் படிப்பு மற்றும் இந்திய சைகை மொழி கற்பித்தல் பட்டயப் படிப்புகளின் சேர்க்கை மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/SV/RR/KV

 


(Release ID: 2080603) Visitor Counter : 56