மக்களவை செயலகம்
இந்தியாவின் வரிவிதிப்பு முறை இன்று உலகின் மிகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான ஒன்றாகக் கருதப்படுகிறது: மக்களவை சபாநாயகர்
Posted On:
03 DEC 2024 7:07PM by PIB Chennai
வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் வரிக் கொள்கைகளில் நிலையான தன்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் உலகின் சிறந்த வரிவிதிப்பு முறையை இந்தியா கொண்டுள்ளது என்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா கூறினார். இந்தக் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் மற்றும் மக்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். நிலையான வரிக் கொள்கை காரணமாக உலக முதலீட்டாளர்களுக்கு விருப்பமான முதலீட்டு இடமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வரி சீர்திருத்த நடவடிக்கைகள், குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பற்றி குறிப்பிட்ட திரு பிர்லா, சமீபத்திய நடவடிக்கைகள் வரிவிதிப்பை எளிமைப்படுத்தி, இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்கியுள்ளன என்று குறிப்பிட்டார். "ஒரே நாடு, ஒரே வரி" என்ற முறையை நமது நாட்டில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தியுள்ளது என்றும், அதிலிருந்து கற்றுக்கொள்ள ஒட்டுமொத்த உலகமும் ஆர்வமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றமும், அரசும் அவ்வப்போது வரிவிதிப்பு முறையை மேம்படுத்தி வருவதாகவும், அதனால்தான் இந்தியாவின் வரிவிதிப்பு முறை இன்று உலகிலேயே மிகவும் வெளிப்படையானதாகவும், நம்பகமானதாகவும் கருதப்படுகிறது என்றும் திரு பிர்லா குறிப்பிட்டார். ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளின் சிறப்பான பணி இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது, இது உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வழிவகுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற 74-வது மற்றும் 75-வது தொகுப்பைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ராயல் பூடான் சுங்கத் துறையின் 5-வது பயிற்சி அதிகாரிகள் அடங்கிய இந்திய ரயில்வே பணியின் (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) 73 பயிற்சி அதிகாரிகள் கொண்ட குழுவுக்கான நாடாளுமன்ற செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த அறிமுக வகுப்பின் தொடக்க அமர்வில் திரு பிர்லா உரையாற்றினார். மக்களவை செயலகத்தில் உள்ள ஜனநாயகங்களுக்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (பிரைட்) இந்த பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது.
1947-ஆம் ஆண்டில் நாட்டின் பட்ஜெட் சுமார் ரூ.170 கோடியாக இருந்தது என்றும், அது இப்போது ரூ.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும், இது அவர்களைப் போன்ற அதிகாரிகளின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளின் விளைவாகும் என்றும் திரு பிர்லா பயிற்சி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
நமது அரசியலமைப்புச் சட்டமும், பகிரப்பட்ட ஜனநாயக மாண்புகளும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியுள்ளன என்று குறிப்பிட்ட திரு பிர்லா, நமது முன்னோர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாதிரியை உருவாக்கியுள்ளனர், இது பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்களை எவ்வாறு ஒன்றிணைப்பது என்பதை உலகுக்குக் காட்டியுள்ளது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080289
*******************
TS/BR/KV
(Release ID: 2080571)
Visitor Counter : 19